Varisu: போடு வெடிய.. வேகமெடுக்கும் 'வாரிசு பட வேலைகள்: தீயாய் பரவும் புகைப்படம்.!

விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்திற்கான ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடந்தது. அதன்பின்னர் பீஸ்ட் படத்தின் போது கொரோனா கட்டுபாடுகள் இருந்ததால் இசை வெளியீட்டு விழா நடத்த முடியவில்லை. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ‘வாரிசு’ படத்திற்காக ஆடியோ லான்ச் நடைபெறவுள்ளதும், விஜய் பேசவுள்ளதும் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.

விஜய்யின் ‘வாரிசு’ பட ரிலீசுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தனது 66 வது படத்தில் நடிக்க கமிட் ஆனார் விஜய். ‘பீஸ்ட்’ படம் நெகட்டிவ் விமர்சனங்களை குவித்ததால், விஜய் தற்போது நடித்து முடித்துள்ள ‘வாரிசு’ படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘வாரிசு’ படத்தில் முதன்முறையாக விஜய்யின் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். மேலும் இந்தப்படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாகவுள்ள ‘வாரிசு’ படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிளாக ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியானது. விவேக் எழுதிய இந்தப்பாடலை விஜய் பாடியிருந்தார். அதனை தொடர்ந்து இரண்டாவது சிங்கிளாக ‘தீ தளபதி’ பாடல் வெளியானது. தமன் இசையில் சிம்பு இந்தப்பாடலை பாடியிருந்தார். இந்நிலையில் அண்மையில் வெளியான பாடலை கே.எஸ், சித்ரா பாடியிருந்தார். அம்மா செண்டிமென்ட்டில் வெளியாகியுள்ள இந்தப்பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.

Connect Review: நயன்தாராவின் ‘கனெக்ட்’ படம் எப்படி இருக்கு.?: முழு விமர்சனம் இதோ.!

இந்நிலையில் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்றைய தினம் வெளியானது. இதற்காக ‘என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற விஜய்யின் டயலாக்குடன் கூடிய ப்ரோமோ வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். வரும் டிசம்பர் 24 ஆம் தேதி மாலை 4 மணிக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

Nayanthara: நான் அப்படி படுக்க மாட்டேன்: நடிகை நயன்தாரா பகீர் பேட்டி.!

இந்நிலையில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் இசையமைப்பாளர் தமன் நேரில் சென்று அங்கு நடைபெறும் பணிகளை பார்வையிட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தையும், அனிருத்துடன் இருக்கும் போட்டோவையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தமன் பகிர்ந்துள்ளார். ‘வாரிசு’ பட ஆடியோ லான்ச்கான வேலைகள் படு ஜோராக நடந்து வருவது ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.