விஜய் தற்போது வம்சியின் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கப்பட்டு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராஷ்மிகா நாயகியாக நடிக்க சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ் ராஜ், பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
படத்தை பற்றி நாளுக்கு நாள் பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது. அதன் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது.
Thalapathy vijay: தளபதி 68 படத்தில் இப்படி ஒரு சர்ப்ரைஸ் இருக்கா ? ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்..!
இதையொட்டி இப்படத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி மாஸ் ஹிட்டடித்துள்ளன. மேலும் டிசம்பர் 24 ஆம் தேதி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது.
இதனை காண பல ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் கதை பற்றிய செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அதாவது, படத்தில் சரத்குமாரின் வளர்ப்பு மகன் தான் விஜய்.திடீரென சரத்குமார் இறந்துவிடுகிறார்.இதையடுத்து அவரது வியாபாரத்தை விஜய் எடுத்து நடத்துகின்றார்.
அப்போது வரும் எதிர்ப்புகளும், திருப்பங்களும் தான் வாரிசு படத்தின் கதையாம். இந்த கதையை பல படங்களில் பார்த்துள்ளோம் என்றாலும், வம்சி சற்று வித்யாசமாக இந்த கதையை கையாண்டுள்ளார் என்று இணையத்தில் பேசி வருகின்றனர். ஆனால் படம் வெளியான பின்பு தான் உண்மை என்ன என்பது தெரியவரும்.