அப்ப பொங்கல் பரிசு ரூ.5,000 இல்லயா… இப்டி அல்வா கொடுத்தீட்டீங்களே? TMC யுவராஜா!

தமிழகத்தில் பொங்கல் பரிசு ரூ.1,000 குறித்த பேச்சு தான் தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறது. இதுதொடர்பாக நேற்றைய தினம் முதல்வர்

வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து அரிசு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு இல்லை

இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர். இதன்மூலம் அரசுக்கு சுமார் ரூ.2,356.67 கோடி செலவாகும். வரும் 2.1.2023 அன்று பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. அவை இம்முறை இல்லை. குறிப்பாக பொங்கல் பரிசில் கரும்பு சேர்க்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரும்பு, வெல்லத்திற்கு ’நோ’

மேலும் வெல்லமும் இல்லை என்பது வருத்தமளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில்

இளைஞர் அணி தலைவர் யுவராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த முறை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசு 2,500 ரூபாய் கொடுத்த போது, அதை 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.

பொங்கல் பரிசு அறிவிப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளாக பரவிய கொரோனா வைரஸ் காரணமாக பெருமளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து விலைவாசி ஏற்றம், பருவ மழையின் தாக்கத்தால் பயிர் சேதம் என பல்வேறு சிக்கலில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் பொங்கல் பரிசாக வெறும் ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை அறிவித்ததற்கு பதிலாக பொங்கல் இல்லை என்று சொல்லி விட்டு போயிருக்கலாம்.

பெரும் ஏமாற்றம்

இந்த அறிவிப்பு கீழ்த்தட்டு மக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் இதே பொங்கல் பரிசுடன் ரூ.2,500 நிவாரணத் தொகை கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் கொரோனா ஊரடங்கால் சிக்கித் தவித்த மக்களுக்கு பொங்கல் பரிசானது பெரும் உதவியாக இருந்தது. அரசு தரும் பணத்தை யாரும் வீணாக செலவு செய்யப் போவது கிடையாது.

அல்வா கொடுத்துட்டாங்க

அனைவரும் குழந்தைகளுடைய படிப்பு செலவு அல்லது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இந்த பணத்தை பயன்படுத்துவர். இந்த சூழலில் திராவிட மாடல் என்று கூறிக் கொள்ளும் இந்த திமுக அரசு அறிவித்துள்ள வெறும் ஆயிரம் ரூபாய் பரிசு தொகையானது, அவர்களை நம்பி வாக்களித்த தமிழக மக்களுக்கு 2023 பொங்கல் பண்டிகையை ஏமாற்றம் தரும் பொங்கலாக மாற்றியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.