குல்கந்தானது சிறப்பான இளஞ்சிவப்பு ரோஜா இதழ்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. பாரம்பரியமாக, பன்னீர் ரோஸ் எனப்படும் டமாஸ்க் வகை ரோஜாக்கள் இதற்கு பயன்படுகின்றன.
குல்கந்தின் முக்கிய பலன் உடலை குளுமையாக வைத்திருக்க உதவுவது. உடல் உஷ்ணத்துக்கும் மன அமைதியின்மைக்கும் நிறைய தொடர்புண்டு. குல்கந்து உண்பதால் உடலின் வெப்பத்தைத் தனித்து மனதை ரிலாக்ஸ் ஆக்குகிறது. இதனால் ஆழ்ந்த அமைதியான உறக்கம் கிடைக்கிறது.
குல்கந்து சிறந்த ஆன்டாசிட் ஆக செயல்பட்டு அமிலத்தன்மையை சீராக்க உதவக்கூடிய பொருளாகும். அல்சர் நோய் வராமல் காக்கிறது. சிறப்பான ஆக்ஸிஜனேற்ற மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ள குல்கந்து கிருமிகளின் திரட்சியைத் தடுக்கிறது.
குல்கந்தில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுப் பெற செய்கிறது, செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது – பசியை மேம்படுத்துகிறது (பசி), மன அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் தோல் பளபளப்பாக இருக்க உதவுகிறது.
பருக்கள் போன்ற சரும பிரச்சனைகளை சரிசெய்து, சருமத்தை பொலிவாக்குகிறது.

ரத்தத்தை சுத்திகரிக்கிறது…
குல்கந்து இயற்கையான இரத்த சுத்திகரிப்பு செயல்முறையை மேம்படுத்துவதோடு, உடலில் இருந்து நச்சுகளை நீக்கக்கூடியது. உடல் துர்நாற்றத்தை தடுக்கிறது. கண் வீக்கத்தையும் எரிச்சலையும் குறைக்கக்கூடியது.
குல்கந்து உண்பதால் சிற்றின்ப வாழ்வு சிறக்கும். மேலும், ரத்த ஓட்டம் மேம்படுகிறது. இதனால் முடி வேர்களுக்குத் தேவையான ரத்த ஓட்டம் கிடைப்பதுடன், அதன் வளர்ச்சி அதிகரிக்கிறது.
பெண்களுக்கு பயனளிக்கிறது…
பெண்களுக்கு மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் தருவதில் மிகுந்த பலனை அளிக்கிறது. அதிகப்படியான உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு நிவாரணமாக அமைகிறது.
தினசரி உணவில்…
கார்போஹைட்ரேட் நிறைந்த கொழுப்பு இல்லாத இந்த பதார்த்தத்தை உண்ணும்போது, சிற்றுண்டி உண்ண வேண்டும் என்கிற ஆசை (craving) குறைகிறது. இதனால் உடல் எடையைப் பேண நினைப்போருக்கு ஏற்ற ஸ்நாக்ஸாக இருக்கிறது குல்கந்து.
பிரெட்டில் ஜாம் போல தடவி சாப்பிட மிகுந்த சுவையாக இருக்கும். மேலும், பாலிலும் குல்கந்தை கலந்து பருகலாம். போரடிக்கும் காலை உணவை கொஞ்சம் சுவாரஸ்யமாக்க ஓட்ஸ், கார்ன் ஃபிளேக்ஸ் போன்றவற்றுடன் ஒரு ஸ்பூன் குல்கந்து கலந்து சாப்பிடலாம்!
சாரல் வழங்கும் அசல் குல்கந்து
நறுமணமிக்க அசல் பன்னீர் ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் சாரல் ரோஜா குல்கந்து உங்களின் ஆரோக்கியத்தைக் காக்கும் அருமருந்துகளில் ஒன்றாகும். சுவையான அற்புதமான வாசனை கொண்ட, ரசாயனங்கள் அற்ற முதல் தர சாரல் குல்கந்தை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிடலாம்!
விகடன் வாசகர்களுக்குச் சிறப்புச் சலுகையாக, ரூ. 200-க்கு மேல் ஆர்டர் செய்வோருக்கு, 30% தள்ளுபடி வழங்குகிறது சாரல் ஃபுட்ஸ். SAARAL எனும் டிஸ்கவுண்ட் கோட் பயன்படுத்தி இந்தத் தள்ளுபடியைப் பெற்றிடுங்கள்! (இந்த டிஸ்கவுண்ட் சாரல் ஃபுட்ஸின் அனைத்து தயாரிப்புகளுக்கும் உண்டு.) Visit: www.saaralstore.com