இதென்ன கூத்து… மேடையில் உதயநிதி இருக்கும் போது கொந்தளிச்சது யார் தெரியுமா?

ஒடிசா மாநிலத்தில் வரும் ஜனவரி 13-29 வரை 15வது உலகக்கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடரில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் உலகக்கோப்பை இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மும்பையில் இருந்து சென்னைக்கு வந்திருந்தது. இந்த கோப்பையை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது.

அமைச்சர் உதயநிதி பங்கேற்பு

இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்

, சென்னை மேயர் பிரியா ராஜன், அரசு அதிகாரிகள் மற்றும் முன்னாள் ஹாக்கி வீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தான் சர்ச்சை வெடித்திருக்கிறது. இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் வி.பாஸ்கரன் திடீரென மேடை அருகே வந்து கேள்வி எழுப்பினார்.

ஹாக்கி வீரர்கள் கொந்தளிப்பு

இதென்ன ஹாக்கி நிகழ்ச்சியா? இல்லை வேறு ஏதாவது ஒரு நிகழ்ச்சியா? விளையாட்டின் அடிப்படையான அம்சங்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? உரிய வழிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை எனக் குற்றம்சாட்டினார். எங்களை வரவழைத்து அவமானப்படுத்தி வீட்டீர்கள். இந்தியாவிற்காக உலகக்கோப்பையை வென்று கொடுத்த கிரிக்கெட் வீரர்களை இப்படி செய்வீர்களா?

கிரிக்கெட் vs ஹாக்கி

கீழே அமர வைப்பீர்களா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அருகே சென்று தனது குறையை தெரியப்படுத்தினார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இப்படி செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார். அதற்கு, வருங்காலங்களில் இத்தகைய சங்கடங்கள் ஏற்படாமல் பார்த்து கொள்ளப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார்.

உறுதி அளித்த உதயநிதி

பின்னர் இதுபோல் இனி நடக்கக் கூடாது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் உதயநிதி அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. முன்னாள் கேப்டன் வி.பாஸ்கரன் நாட்டின் முன்னாள் பிரதமர்கள், முன்னாள் முதல்வர்கள் உடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் மேடையை பகிர்ந்திருக்கிறார். இத்தகைய சூழலில் சென்னையில் நடந்த ஹாக்கி உலகக்கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் மேடையில் ஹாக்கி வீரர்கள் அமர வைக்கப்படவில்லை என்று தெரிகிறது.

மேடையில் இடம் தரவில்லை

எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. சர்வதேச போட்டிகள் மற்றும் ஒலிம்பிக்கில் விளையாடி பெருமை சேர்ந்த முன்னாள் ஹாக்கி வீரர்கள், இந்தியாவிற்கு உலகக்கோப்பை ஹாக்கி தொடரை வென்று தந்த வி.ஜே.பிலிப்ஸ், முன்னாள் தமிழக ஹாக்கி வீரர்கள் உள்ளிட்டோர் மேடைக்கு முன்பு வரிசையாக அமர வைக்கப்பட்டுள்ளனர்.

யார் ஏற்பாடு செய்தது?

இதை கவனித்த வி.பாஸ்கரன் கோபத்தில் கொந்தளித்து விட்டார். இதுதொடர்பாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் சிறப்பு விருந்தினராக தான் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் இருக்கை ஒதுக்கீடு விஷயங்களை இந்திய ஹாக்கி கூட்டமைப்பும், மாநில விளையாட்டு துறை அமைச்சகமும் தான் ஏற்பாடு செய்திருந்தது எனக் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.