பிக்பாஸ் சீசன் 6 தமிழ் இறுதிக்கட்டத்தை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. இதனால், இனி வரும் ஒவ்வொரு வாரமும் ஹாட்சீட்டில் இருக்கப்போகிறவர்கள் யார்? என்பதே பெரிய டிவிஸ்டாக இருக்கும். வீட்டிற்குள் இருக்கும் விக்ரமன், அசீம், ஏடிகே, ரச்சிதா, மைனா, அமுதவாணன், தனலட்சுமி, கதிரவன், ஷிவின் ஆகிய அனைவரும் டஃப் போட்டியாளர்களாக இருப்பதால், இந்தவாரம் முதல் வெளியேறப்போகும் போட்டியாளர்கள் யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது.
ஏடிகே, அமுதவாணன் ஆகியோர் எலிமினேஷன் லிஸ்டில் இல்லாததால், அவர்கள் இருவருக்கும் இந்த வாரம் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களை தவிர்த்து விக்ரமன், அசீம், மைனா உள்ளிட்டவர்கள் எலிமினேட் லிஸ்டில் இடம்பிடித்துள்ளனர். இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியிருப்பதால், வாக்குகள் வித்தியாசத்தில் குறைவான வாக்குகளை பெற்றவர்கள் எலிமினேட் செய்யப்படுவார்கள். அதனடிப்படையில் விக்ரமன் மற்றும் அசீம் ஆகியோர் அதிக வாக்குகளை பெற்று முன்னணியில் இருக்கின்றனர். அதனால் அவர்கள் இருவரும் இந்தவாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆக வாய்ப்பு இல்லை. அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஷிவின், ரச்சிதா, கிதரவன், தனலட்சுமி ஆகியோர் குறைவான வாக்குகளின் அடிப்படையிலேயே லீடிங்கில் இருக்கின்றனர்.
இதனால், இந்த ஓட்டு வித்தியாசம் கடைசி நொடி வரை மாறிக் கொண்டே இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இப்போதைய சூழலில் தனலட்சுமி தான் குறைவான ஓட்டுகளை பெற்று கடைசி இடத்தில் இருக்கிறார். அதேநேரத்தில் அவருக்கு மேல் இருக்கும் மைனா, ரச்சிதா, கதிரவன் ஆகியோர் எல்லாம் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் எல்லாம் இல்லை. மிக மிக சொற்ப வாக்குகள் வித்தியாசத்திலேயே இருப்பதால், பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்தவாரம் யார் வெளியேறுவார்கள் என்பதில் பெரிய டிவிஸ்டே காத்துக் கொண்டிருக்கிறது.