கோரக்பூர், :உத்தர பிரதேசத்தில் நடந்த நிலத் தகராறில், 80 வயது முதியவரை, அவரது மகன், மருமகள் மற்றும் பேரன் சேர்ந்து அடித்து கொலை செய்தனர்.
உத்தர பிரதேசத்தில், தவுஷர் டெஹ்ரிபார் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்தர் யாதவ், 80, தன் பூர்வீக நிலத்தை விற்பது குறித்து மகன் லால்மனிடம் அடிக்கடி பேசி வந்தார்.
இதற்கு லால்மனும், அவரது குடும்ப உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக, நேற்று முன்தினம், தந்தை, -மகன் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, லால்மன், அவரது மனைவி விமலா தேவி, மகன் முன்னா மூவரும் சேர்ந்து, ராஜேந்தரை மரக்கட்டைகளால் கடுமையாக தாக்கி உள்ளனர்.
இது குறித்து மூத்த மருமகள் ஷீலா தேவி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அவர்கள் வருவதற்குள், லால்மன், மனைவி மற்றும் மகனுடன் தப்பிச் சென்றார்.
இதையடுத்து, காயமடைந்த முதியவர் ராஜேந்தரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பின், ஷீலா தேவி அளித்த புகாரின் அடிப்படையில், லால்மன், அவரது மனைவி விமலா தேவி மற்றும் மகன் முன்னா மீது, போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்