மும்பை, மஹாராஷ்டிரா நெடுஞ்சாலை ஒன்றில், துப்பாக்கியுடன் சாகசம் செய்து, ‘வீடியோ’ எடுத்த இளைஞரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, நாக்பூர் – மும்பையை இணைக்கும் அதிவேக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுரங்கப் பாதை அருகே, காரின் முன் நிற்கும் ஒரு இளைஞர்,வானத்தை நோக்கி தீப்பொறி பறக்க துப்பாக்கியால் சுடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்திய போலீசார், சந்திரகாந்த் கெய்க்வாட் என்ற இளைஞரை நேற்று கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சந்திரகாந்த் வைத்திருந்ததுபொம்மை துப்பாக்கி என்பதும், ‘ஸ்பெஷல் எபக்ட்’ பயன்படுத்தி, தீப்பொறி பறக்க துப்பாக்கியால் சுடுவது போல் வீடியோ எடுத்ததும் தெரிய வந்தது.
சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் ‘போஸ்’ கொடுத்து, புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிடும் போக்கு அதிகரித்து வரும் சூழலில், இது போன்ற காரியங்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
உரிமம் பெற்ற ஆயுதங்களுடன் போஸ் கொடுப்பதும் சட்டவிரோதமானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement