சென்னை: நாகைக்கு கிழக்கே 480 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கை கடற்பகுதியை நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
