பாலுக்குள் விழுந்த பல்லி:ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதி


பாலுக்குள் பல்லி விழுந்து மயக்கமுற்ற நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த
ஐவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலஸ்தோட்டம் பகுதியிலேயே நேற்று(22.12.2022)
இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாலில் பல்லி விழுந்த சம்பவம்

இதன்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 01 வயது 04 , 05 மற்றும் 09 வயது,63 வயது
உடையவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின்
பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

பாலுக்குள் விழுந்த பல்லி:ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதி | Trincomalee Five Members Lizard Fell Into The Milk

பாட்டி பாலை காய்ச்சி சிறுவர்களுக்கும்
கொடுத்துவிட்டு தானும் அறுந்திய போது மயக்க நிலை ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து
பால் காய்ச்சிய சட்டியை பார்த்தபோது அதில் பல்லி விழுந்து கிடந்ததாகவும் தெரிய
வருகின்றது.

இதேவேளை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குறித்த ஐவரும் திருகோணமலை பொது
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.