பெரம்பலூர் அருகே தனியார் சிபிஎஸ்சி பள்ளியின் விளையாட்டுப் போட்டிக்காக பொது மக்களின் வழி பாதையை அடைத்து விழாவுக்கு ஏற்பாடு செய்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடேசபுரம் பகுதியில் தனியார் சிபிஎஸ்சி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடைபெற இருக்கின்றது.
இந்த நிலையில் பொதுமக்கள் செல்கின்ற நடைபாதையை ஆக்கிரமித்து அடைப்புகள் போடப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி வழியே செல்கின்ற மக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.
அவர்கள் சுற்றி கொண்டு செல்லும் நிலை இருக்கிறது. பள்ளியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்காக சாலை பகுதியை ஆக்கிரமிப்பது எப்படி நியாயம் என்று பொதுமக்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.