ஜோத்பூர்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சொந்தமான ஸ்கை லைட் ஹாஸ்பிட்டாலிட்டி நிறுவனம், ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் நகரில் நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் ராபர்ட் வதேரா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.எஸ்.பாட்டி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை ரத்து செய்ய நீதிபதி மறுத்துவிட்டார். எனினும் இந்த வழக்கில் ராபர்ட் வதேராவை கைது செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ராபர்ட் வதேரா மேல்முறையீடு செய்ய அனுமதிக்கும் வகையில் நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.