தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு தேர்வுகள் இன்று முடிவடைந்த நிலையில் நாளை முதல் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு 9 நாட்கள் தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. இதனால் வரும் ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளதால் தமிழக அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான விடுமுறையை நீட்டித்துள்ளது. அதன்படி 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் துவங்கும் என பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏற்கனவே அறிவித்தபடி ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.