அஜித் தற்போது வினோத்தின் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் துணிவு திரைப்படம் தன்னை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார் அஜித்.
இப்படம் ஒரு வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. மேலும் இது முழுக்க முழுக்க வினோத்தின் ஸ்டைலில் உருவான திரைப்படம் என்றும் பேசப்பட்டு வருகின்றது. எனவே இப்படம் சதுரங்கவேட்டை, தீரன் ஆகிய படங்களை போல தத்ரூபமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Varisu: வாரிசு படத்துல அதுதான் ரொம்ப ஸ்பெஷலாம்..வெளியான டாப் சீக்ரட்..!
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் துவங்கப்பட்டு தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதைத்தொடர்ந்து இப்படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது.
மறுபடியும் போலீஸ் கேரக்டர் ஏன்? Aakrosham Movie Team Interview
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை காண ஆவலாக இருக்கும் சூழலில் அஜித் தன் அடுத்த பட வேலைகளை விரைவில் துவங்கவுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள AK62 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி இறுதியில் துவங்குமாம்.
லைக்கா தயாரிக்கும் இபபடத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். அஜித் தொடர்ந்து பல வருடங்களாக சீரியஸான கதையம்சம் கொண்ட படங்களிலேயே நடித்து வருவதால் ஒரு பீல் குட் படத்தில் நடிக்க அஜித் முடிவெடுத்துள்ளாராம்.
அதன் காரணமாகவே விக்னேஷ் சிவனின் கதையை அஜித் ஓகே செய்ததாக பேசி வருகின்றனர். இந்நிலையில் அஜித்தை கடந்த பல வருடங்களாக சீரியஸான படங்களில் பார்த்த அவரது ரசிகர்கள் அவர் பீல் குட் படத்தில் நடித்தால் ஏற்றுக்கொள்வார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இருப்பினும் அஜித் துணிந்து இந்த முயற்சியில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.