Varisu: வம்சி இப்படி செஞ்சிட்டாரே..குமுறும் ரசிகர்கள்..காரணம் இதுதான்..!

விஜய் மற்றும் வம்சி கூட்டணியில் வாரிசு திரைப்படம் உருவாகியுள்ளது. ராஷ்மிகா நாயகியாக நடிக்க தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார், மேலும் சரத்குமார், ஷ்யாம்,பிரபு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் என மாறி மாறி நடத்தப்பட்டது.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதுவரை இப்படத்திலுருந்து வெளியான போஸ்டர்கள், பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரட்டிப்பாகியுள்ள நிலையில் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாகவுள்ளது.

Varisu: வாரிசு படத்துல அதுதான் ரொம்ப ஸ்பெஷலாம்..வெளியான டாப் சீக்ரட்..!

அதே பொங்கலுக்கு அஜித்தின் துணிவு படமும் வெளியாவதால் ரசிகர்கள் ஆவலாக இந்த மோதலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்திலிருந்து ரஞ்சித்தமே, தீ தளபதி ஆகிய பாடல்கள் வெளியாகி மாஸ் ஹிட்டடித்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அம்மா செண்டிமெண்ட் பாடல் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தது.

மறுபடியும் போலீஸ் கேரக்டர் ஏன்? Aakrosham Movie Team Interview
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதைத்தொடர்ந்து தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையில் மிகப்பிரமாண்டமாக நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் தற்போது இப்படத்திலிருந்து ஒரு போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது.

இதைப்பார்த்த ரசிகர்கள், இந்த போஸ்ட்டரை தான் முதல் பார்வையாக வெளியிட்டிருக்க வேண்டும். இப்படி செஞ்சிட்டீங்களே வம்சி என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால் வாரிசு படத்தின் முதல் போஸ்டர் சில கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள போஸ்டர் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகின்றது. அதன் காரணமாகவே ரசிகர்கள் இவ்வாறு கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.