வாஷிங்டன்: அமெரிக்காவின் வெளியுறவு துறை துணை அமைச்சர் பதவிக்கு இந்திய-அமெரிக்கரான ரிச்சர்டு ஆர். வர்மாவை அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார்.
இது குறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள செய்தியில், அமெரிக்காவின் வெளியுறவு துறை மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை அமைச்சராக இந்திய-அமெரிக்கரான ரிச்சர்டு ஆர். வர்மாவை அதிபர் பைடன் நியமனம் செய்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரிச்சர்டு ஆர். வர்மா:
இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதராவார். இவர் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இப்பணியாற்றுகிறார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2009 ஆம் ஆண்டு அமெரிக்க அரசு சட்டமன்ற அலுவல்கள் துறை துணைச் செயலாளராக இவரை நியமித்தார். பஞ்சாப் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்ட இவர், இந்தியாவுக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றும் முதல் அமெரிக்க வாழ் இந்தியர் ஆவார்.

அதிபரின் நுண்ணுறிவு ஆலோசக வாரியத்திற்கு நியமிக்கப்பட்டதுடன், பேரழிவுக்கான ஆயுதங்கள் மற்றும் பயங்கரவாத ஆணையத்தின் முன்னாள் உறுப்பினராகவும் நியமனம் செய்யப்பட்டவர். கடந்த காலங்களில் பல்வேறு விருதுகளையும் அவர் வாங்கி குவித்துள்ளார்.
1994ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை, அமெரிக்க விமானப் படையில் பணியாற்றியவர். அமெரிக்க வெளியுறவுத் துறையில் சட்ட விவகாரங்களுக்கான உதவி அமைச்சராக 2009ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement