
அமெரிக்காவில் கடும் குளிர் நிலவுவதால், வீடுகளற்றோரைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்ற வருகிறது.

சீனா, ஜப்பான், தென் கொரிய, ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து வருவோருக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்ய இந்திய அரசு உத்தரவு.

நிலவிவரும் கடும் குளிரைச் சமாளிக்க மக்கள் எரிவாயுவை அதிகம் பயன்படுத்துவதால், அமெரிக்காவில் அதன் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. எரிவாயு, மின்சாரம், எண்ணைய் உட்பட அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

கனடாவில் நிலவும் கடுமையான பனிப்பொழிவால், மேற்கு ஹட்சன் பே பகுதியில் உள்ள பனிக்கரடியின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் மோசமான வானிலை காரணமாக, 5,000 விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டனின் சன் நாளிதழில் வெளியான, இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் குறித்த செய்திக்குப் பல எதிர்ப்புகள் வந்த நிலையில், தொகுப்பாளர் ஜெரமி க்ளார்க்சன்ஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.

816.7 பில்லியின் அமெரிக்க டாலர்கள் ராணுவத்திற்கு ஒதுக்கும் பாதுகாப்பு சட்டத்தில் ( Defense Authorization Act) பைடன் கையெழுத்திட்டுள்ளார்.

இங்கிலாந்தில் சுகாதாரத்துறை ஊழியர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி, 2023 ஜனவரியில் போராட்டங்கள் நடத்தப்போவதாக அறிவிப்பு.

சீனாவில் ஒரே நாளில் 37 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிப்பு என தகவல்.

ஜோ பைடன் இந்திய – அமெரிக்கரான ரிச்சர்ட் வர்மாவை வெளியுறவுத்துறையின் உயர்மட்ட தூதரக பதவிக்கு பரிந்துதுரை செய்துள்ளார்.

நேபாளத்தில் விடுதலையான சீரியல் கில்லர், பிகினி கில்லர் என அழைக்கப்படும் சார்லஸ் சோப்ராஜ், 20 வருடங்களுக்கு பிறகு பிரான்ஸ் அனுப்பிவைக்கப்பட்டார்.