ஆஞ்சநேயர் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டிய சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை அருகே பாலையூர் எனும் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பாலையூர் கிராமத்தில் வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் ஒன்று இருக்கின்றது.
இந்த கோவிலில் வேத நாராயண பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சன்னதிகள் இருக்கின்றன. இந்த சன்னதியில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. இந்த விழாவை முன்னிட்டு அக்கோவிலில் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும், 108 வடமாலை சாத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின் ஆஞ்சநேயர் பிறந்தநாளை முன்னிட்டு அவர் மீது பக்தி கொண்ட இளைஞர்கள் 10 கிலோ எடை கொண்ட ஒரு கேக்கை வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.