இம்மாத இறுதியில் ஓய்வுபெறவுள்ள 25000 அரச ஊழியர்கள்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்


ஓய்வுபெறும் அரச ஊழியர்களுக்கு பதிலாக புதிய அரச ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வது குறித்து பரிசீலிக்க பொது நிர்வாக, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசெம்பர் 31ஆம் திகதியுடன் 60 வயது பூர்த்தியான 25 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர்.

இந்நிலையில், இவ்வாறு ஓய்வுபெறவுள்ள 25 ஆயிரம் அரச ஊழியர்களுக்கும் குறைவான ஊழியர்களை மாத்திரமே திரும்ப அரச சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இம்மாத இறுதியில் ஓய்வுபெறவுள்ள 25000 அரச ஊழியர்கள்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம் | Government Worker Sri Lanka Pension Public Servant

ஓய்வுபெறும் வயதை நீட்டிக்க விரும்பும் ஊழியர்களின் பட்டியல்

இதற்கமைய, ஓய்வுபெறும் வயதை நீட்டிக்க விரும்பும் ஊழியர்களின் பட்டியலையும், ஓய்வு பெற்றவர்களுக்கு பதிலாக தேவைப்படும் ஆட்சேர்ப்புகளின் எண்ணிக்கையையும் சமர்ப்பிக்குமாறு அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களிடம் குழு கேட்டுக் கொண்டுள்ளது.

இம்மாத இறுதியில் ஓய்வுபெறவுள்ள 25000 அரச ஊழியர்கள்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம் | Government Worker Sri Lanka Pension Public Servant

அதற்கிணங்க, அரச திணைக்களங்கள் மற்றும் துறைகளில் அத்தியாவசியமான பதிலீட்டு தேவைகளை மட்டுமே தெரிவிக்குமாறு செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களுக்கு குழு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை,அரச ஊழியர்களுக்கு ஒரு டிரில்லியன் தொகையை அரசாங்கம் செலவழிப்பதால் இந்த தொகையிலேயே பதில் ஆட்சேர்ப்புகளுக்கும் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளமையினால் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.