வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெய்ஜிங்: சீனாவில், இந்த வாரத்தில் ஒரே நாளில் 3.7 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு சுகாதாரத்துறை கணித்துள்ளது. இந்தளவு பாதிப்பு உலகளவில் மிக அதிகமாகும்.
நம் அண்டை நாடான சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியது. அரசு கடுமையான ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததை எதிர்த்து மக்கள் போராட்டம் வெடித்தது.
இதையடுத்து அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இதன் விளைவாக, கொரோனா பரவல் உச்சத்தை தொட்டது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் குவிந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதி மற்றும் பணியாளர்கள் இன்றி மருத்துவமனைகள் திணறி வருகின்றன. தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த வாரத்தில் , ஒரே நாளில் 3.7 கோடி பேர் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என சீன சுகாதாரத்துறை கணித்துள்ளது. இது உலகளவில் அதிகமான தொற்று பரவல் ஆகும். இந்த மாதத்தில் மட்டும் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. இது சீன மக்கள் தொகையின் 18 சதவீதம் ஆகும்.
குயிங்டோ நகரில் மட்டும், தினமும் 4.9 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுவதாக அந்நகர சுகாதாரத்துறை அதிகாரி கூறியுள்ளார். கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த நகரில் மட்டும் சுமார் 1 கோடி பேர் வசித்து வருகின்றனர் எனவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement