கத்தார் விமானத்தில் பயணம்! 300 கிலோ தங்கம்.. இரட்டை பேரக்குழந்தைகளை பிரம்மாண்டமாக வரவேற்கும் முகேஷ் அம்பானி


வீட்டிற்கு முதல்முறையாக வரும் தனது பேரப்பிள்ளைகளை வரவேற்க வாய்பிளக்க வைக்கும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை முகேஷ் அம்பானி குடும்பத்தார் செய்துள்ளனர்.

உலக பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவரின் மகளான இஷா அம்பானி – ஆனந்த் பிரமல் தம்பதிக்கு கடந்த மாதம் 19ஆம் திகதி அமெரிக்காவில் இரட்டை குழந்தைகள் பிறந்தது.

ஆண் குழந்தைக்கு கிருஷ்ணா எனவும், பெண் குழந்தைக்கு ஆதியா எனவும் பெயர் வைக்கப்பட்டது.
குழந்தைகள் பிறந்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் நாளை மும்பைக்கு பெற்றோருடன் முதல் முறையாக வருகின்றனர்.
அதன்படி இஷா மற்றும் அவர்களின் குழந்தைகள் கத்தார் மன்னாரால் அனுப்பப்பட்ட கத்தார் விமானத்தில் பயணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

கத்தார் விமானத்தில் பயணம்! 300 கிலோ தங்கம்.. இரட்டை பேரக்குழந்தைகளை பிரம்மாண்டமாக வரவேற்கும் முகேஷ் அம்பானி | Mukesh Ambani Welcome Grandchild Twins Grand Way

bollywoodshaadis

மன்னரும், முகேஷ் அம்பானியும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.
மருத்துவர்கள் குழுவினர் இஷாவையும், குழந்தைகளையும் பாதுகாப்பாக அழைத்து வர அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாளை மும்பைக்கு திரும்பும் குழந்தைகளுக்கு அம்பானியின் வீட்டில் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதன்படி பிரசத்தி பெற்ற கோவில் அர்ச்சகர்கள் வந்து சிறப்பு பிரார்த்தனைகள் செய்கின்றனர்.

உலக புகழ்பெற்ற திருப்பதி தேவஸ்தானம், துவார்காதிஷ் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இருந்து பிரசாதம் வரவழைக்கப்படுகிறது.
மேலும் 300 கிலோ தங்கத்தை நன்கொடையாக அம்பானி குடும்பம் வழங்குகிறது.

தாத்தா பாட்டியான முகேஷ் மற்றும் நீட்டா தங்கள் பேரக் குழந்தைகளுக்கான சுழலும் படுக்கைகள் மற்றும் தானியங்கு கூரைகள், மற்ற ஆடம்பரமான பொருட்களுடன் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

இது மட்டுமின்றி இரட்டையர்களுக்கு பிஎம்டபிள்யூ நிறுவனத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கார் இருக்கைகளும் தயாராக உள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.