கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னதாராபுரம் அடுத்த சின்னப்புளியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் மகன் யுவேந்திரன்.
இவர் எலவனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், யுவேந்திரன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அவர் சின்னதாராபுரம்-அரவக்குறிச்சி சாலையில் சின்னப்புளியம்பட்டி பிரிவு அருகே வந்துகொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி அவர் மீது மோதியதில் பலத்தக் காயமடைந்தார்.
இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், யுவேந்திரன் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.