ஆரல்வாய்மொழி : மார்கழி மாதம் பிறந்ததில் இருந்து அதிக பனிபொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்த நிலையில், விலை உயர்வால் நேற்று பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி உள்ளானார்கள். கடந்த சில நாட்களாக தோவாளை பூ மார்க்கெட்டில் ரூ.1800, ரூ.1900 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லி நேற்று கிலோ ரூ.2700 ஆக உயர்ந்தது. இதே போல் பிச்சி பூவும் கிலோ ரூ.2 ஆயிரம் ஆனது. முல்லைப்பூ ரூ.1800 ஆக இருந்தது. கிறிஸ்துமசையொட்டி பூக்கள் தேவை அதிகரித்ததால் விலை உயர்ந்ததாக வியாபாரிகள் கூறினர்.
வரத்தும் குறைவாக இருந்ததும் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. தோவாளை அரளி ரூ.200, சேலம் அரளி ரூ.250, மஞ்சள் கேந்தி ரூ.60, ஆரஞ்சு கேந்தி ரூ.65, கொளுந்து ரூ.200, மரிக்கொழுந்து ரூ.150, மஞ்சள் செவ்வந்தி ரூ.100, வெள்ளை செவ்வந்தி ரூ.200 ஆக இருந்தது. பாக்கெட் ரோஸ் ரூ.30, பட்டன் ரோஸ் ரூ.180, ஸ்டம்ப் ரோஸ் ரூ.300 ஆக இருந்தது.