சென்னை சென்ட்ரலில் இருந்து காட்பாடி வழியாக கோவை செல்லும் இன்டர்சிட்டி ரயில் ராணிப்பேட்டை மாவட்டத்தை அடுத்த அரக்கோணம் பகுதியில் உள்ள மோசூர் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது. ரயிலின் உயர் மின்னழுத்த உராய்வு கம்பி திடீரென உடைந்ததால் ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ரயிலின் உயர் மின்னழுத்த உராய்வு கம்பியை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் காரணமாக பெங்களூரு, திருவனந்தபுரம் செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.