'திமுக குடும்ப அரசியல் தான்'… மேடையில் அப்ரூவரான அமைச்சர்..!

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்து முதல்வர்

தலைமையில்

ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. திமுக அரசு பொறுப்பேற்ற போதே, அவரது மகன் உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை.

மேலும், முதல்வர் ஸ்டாலினே நான்காவது முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான் அமைச்சர் பதவிக்கு வந்தாரு. 30 வருஷ அரசியல் அனுபவம் இருந்ததால கட்சிக்கும் அவருக்கும் அது ஒரு வெற்றிகரமான சூழ்நிலையாகக் கருதப்பட்டது. ஆனா, ஆட்சிக்கு வந்த உடனே உதயநிதிக்கு அமைச்சர் அங்கீகாரம் கொடுக்கப்பட்டால் அது வாரிசு அரசியல் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு வழி வகுக்கும் என்று கூட இருந்தவர்கள் கூறியதால் உதயநிதியின் அமைச்சர் பதவி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக

ஸ்டாலினுக்கு பதவி கொடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், திமுக குடும்ப கட்சிதான் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்த நாள் விழாவாக அப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா. மோ. அன்பரசன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கிய சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, அவர் கூறிய இந்தியாவில் பல மாநில கட்சிகள் உள்ளன. இதுவரை 50 லட்சம் இளைஞர்களை கொண்ட ஒரே இயக்கம் திமுக மட்டும் தான். அமைச்சராகப் பதிவேற்ற உதயநிதி ஸ்டாலின் தன் துறை மட்டுமில்லாமல் அனைத்து துறைகளையும் கவனம் செலுத்திவருகிறார். திமுக குடும்ப அரசியல் தான்; கலைஞர் இருக்கும் போது எப்படி தளபதி உறுதுணையாக இருந்தாரோ அதேபோல் தளபதிக்கு உறுதுணையாக உதயநிதி இருந்து வருகிறார். அந்த வகையில் திமுகவின் அடுத்த தலைவராக உதயநிதியை உருவாக்கி வருகிறோம் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கா. செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஸ்வநாதன், கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் கார்த்திக், திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.