தீவிர மஞ்சள் காமாலை! பிரபல தமிழ் குணச்சித்திர நடிகர் உயிரிழப்பு


பிரபல திரைப்பட நடிகர் மாயி சுந்தர் தனது 50வது வயதில் காலமானார்.

மாயி சுந்தர்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராக இருந்தவர் மாயி சுந்தர்.
இவர் மாயி, துள்ளாத மனமும் துள்ளும், வெண்ணிலா கபடி குழு, வெண்ணிலா கபடி குழு 2, குள்ள நரி கூட்டம், சிலுக்குவார் பட்டி சிங்கம், கட்டா குஸ்தி என 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மன்னார்குடியை சேர்ந்த மாயி சுந்தர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தீவிர மஞ்சள் காமாலை! பிரபல தமிழ் குணச்சித்திர நடிகர் உயிரிழப்பு | Actor Maayi Sundar Passed Away

உயிரிழப்பு

இந்த நிலையில் உடல்நிலை மோசமாகி இன்று அவர் உயிரிழந்தார்.
மாயி சுந்தர் மறைவுக்கு திரையுலகத்தினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவரின் இறுதிச்சடங்கு இன்று நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.