பரவும் கொரோன வைரஸ்… பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் சரஸ்வதி வித்தியாசாலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.

அதன் பின்பு செய்தியாளரை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது; ஆசிரியர் தேர்வில் 14 சதவீதம் பேர்தான் பாஸ் செய்து உள்ளது என்ற கேள்விக்கு அதற்கான வழிவகைகள் செய்யப்பட்டு வருவதாகவும் தமிழக முதலமைச்சர் அதிகப்படியான கவனத்தை இந்தத் துறைக்கு ஒதுக்குவதாகவும் கூறினார். மேலும், டீச்சர்ஸ் ட்ரைனிங்கிற்கு கூடுதல் பட்ஜெட் மற்றும் மேம்படுத்துவதற்கான வழியை செய்வோம்.

கொரோனா வைரஸ்
மீண்டும் பரவி வரும் நிலையில் கல்வித்துறை மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் அதற்கான அறிவுரைகள் முதல்வர் அலுவலகத்திலிருந்து சுகாதாரத்துறை மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடைபிடிப்போம். நீட் தேர்வுக்கு அரசு பயிற்சிகளை வழங்கி வருகிறது. தமிழகத்திற்கு நீட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்தமாக தனி தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

பள்ளிக்கல்வித்துறை சார்பாக நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதை நிறுத்தவில்லை. தனியார் பள்ளிகளில் மத்திய அரசு அறிவித்துள்ள இட ஒதுக்கீடை வழங்கவில்லை என்ற கேள்விக்கு ஆர்டிஐபடி கொடுக்கப்பட்டு வருவதாகவும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளை விட தற்போது அதற்கான நிதிகள் அதிகம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அதில் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என்றார். மேலும், தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கான இட ஒதுக்கீடை சரியான முறையில் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாம்பொழி பேட்டியின்போது சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி. ஒன்றிய திமுக செயலாளர் சுப.சின்னத்துரை, பேரூராட்சி சேர்மன் முகமது மீரான், நகர திமுக செயலாளர் பக்ருதீன், உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.