வாரிசு படத்தில் இத்தனை பாடல்களா? வெளியானது டிராக் லிஸ்ட்!

பொங்கல் விருந்தாக அமையப்போகும் விஜய்யின் ‘வாரிசு’ படத்தை காண ரசிகர்கள் பலரும் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.  படத்தை திரையில் காண வேண்டும் என்கிற ஆர்வம் ஒரு பக்கம் இருந்தாலும், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதி சொல்லப்போகும் குட்டி ஸ்டோரியை கேக்கவே பலரும் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.  முன்னர் வெளியான பீஸ்ட் படத்திற்கு ஆடியோ வெளியீட்டு விழா எதுவும் நடைபெறாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 24-ம் தேதியான இன்றைய தினம் மாலை 4 மணியளவில் சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.  ஏற்கனவே விஜய் சொன்ன ஒரு குட்டி ஸ்டோரிக்கு விஷுவல் எஃபெக்ட் கொடுத்து ரசிகர்கள் வெளியிட்ட வீடியோ ட்ரெண்டிங்கானது.

தற்போது ‘வாரிசு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக பிரம்மாண்ட செட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதை சில தினங்களுக்கு முன்னர் இசைமைப்பாளர் தமன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டார்.  ‘வாரிசு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி குறித்து அறிவிக்கும் வண்ணமாக படக்குழு வெளியிட்டிருந்த போஸ்டரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.  இந்நிலையில் ‘வாரிசு’ படத்தின் டிராக் லிஸ்ட் வெளியாகியுள்ளது, அதன்படி இந்த படத்தில் மொத்தமாக 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.  ஏற்கனவே தளபதி விஜய் மற்றும் மானசி குரலில் ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’, சிம்பு குரலில் ‘தீ தளபதி’ மற்றும் சித்ரா குரலில் ‘சோல் ஆஃப் வாரிசு’ போன்ற பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்று ட்ரெண்டாகியுள்ளது.

மேலும் ஷங்கர் மகாதேவன் குரலில் ‘பூங்கொடி பூபதி’, அனிரூத் குரலில் ‘பாஸ் ரிட்டர்ன்ஸ்’ மற்றும் சித் ஸ்ரீராம் மற்றும் ஜொனிதா காந்தி குரலில் ‘கடிதங்கள் வரைந்தாய்’ போன்ற பாடல்கள் இன்று நடைபெறும் ‘வாரிசு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியிடப்படும்.  வாரிசு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா எந்த தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்பு இல்லை, இந்நிகழ்ச்சியின் வெளியீட்டு உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.  புத்தாண்டு தினத்தில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் என்று கூறப்படுகிறது, நேரில் நிகழ்ச்சியை காண முடியாத ரசிகர்கள் தொலைக்காட்சி வாயிலாக கண்டு ரசிக்கலாம், ஆனால் அதற்கு கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.