24 மணி நேரமும் இந்து முஸ்லீம் வெறுப்பு; ராகுல் காந்தி சாடல்.!

வருகிற 2024ம் ஆண்டு இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலை எதிர்கொள்ளவுள்ள காங்கிரஸ் கட்சி இப்போதே அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக, கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (பாரதமே ஒன்றிணைவோம்) என்ற பெயரில் 3,500 கிலோ மீட்டர் தூரம், 150 நாட்கள் பாதயாத்திரை மேற்கொள்கிறார் அக்கட்சியின் முன்னாள் அகில இந்திய தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி.

ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாது உலக அளவிலும் ராகுல் காந்தியின் பாத்யாத்திரை பேசு பொருளாகியுள்ளது. கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால், ராகுல்காந்தி தனது பாதயாத்திரையை நிறுத்தி கொள்ள வேண்டும் என மத்திய சுகாதரத்துறை அமைச்சர் கடிதம் எழுதினார். அதற்கு காங்கிரஸ் கடும் எதிர்வினை ஆற்றியது. தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் தற்போது டெல்லியில் உள்ளது.

இந்தநிலையில் ‘மத வேறுபாடுகளை ஆயுதமாக பயன்படுத்தி, பாஜக அரசு வெறுப்புணர்வை பரப் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி செங்கோட்டையில் பேசும்போது, “உண்மையான பிரச்சினைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசைதிருப்ப, 24×7 இந்து-முஸ்லீம் வெறுப்பு பரப்பப்படுகிறது.

நான் 2,800 கிமீ நடந்தேன், ஆனால் வெறுப்பைக் காணவில்லை. நான் டிவியை இயக்கும்போது, நான் வன்முறையைக் காண்கிறேன். ஊடகங்கள் ஒரு நண்பன். ஆனால், மேடைக்குப் பின்னால் இருந்து வரும் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நாம் சொல்வதை அது உண்மையாகக் காட்டுவதில்லை. ஆனால் இந்த நாடு ஒன்றுதான், அனைவரும் ஒற்றுமையாக வாழ விரும்புகிறோம்’’ என ராகுல் காந்தி கூறினார்.

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வதேரா டெல்லியில் இன்று காலை யாத்திரையில் இணைந்தனர். பின்னர் செங்கோட்டை அருகே நடைபயணம் சென்றபோது, நடிகர்
கமல்ஹாசன்
ராகுல் காந்தியுடன் நடந்து வந்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன், காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்ராவில் சேருவதும், ராகுல் காந்தியுடன் நடப்பதும் விலையுயர்ந்த அரசியல் தவறு என்று முதலில் கூறப்பட்டதாகக் கூறினார்.

இது குறித்து கமல்ஹாசன் கூறும்போது, ‘‘நான் என்னை நானே கேட்டுக் கொண்டேன். இது நாட்டுக்கு நான் தேவைப்படும் நேரம். கமல், நாட்டை ஒன்றிணைக்க உதவுங்கள், உடைக்க வேண்டாம் என்று எனது மனது என்னிடம் கூறியது” என்று கமல்ஹாசன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.