Vijay vs Ajith: அஜித் பற்றி தரக்குறைவான போஸ்டர்: விஜய் ரசிகர்கள் செயலால் வெடித்த சர்ச்சை.!

பொங்கலுக்கு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீசாவதால் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். திரையரங்குகள் ஒதுக்குவது, போஸ்டர் ஓட்டுவது, கட் அவுட் வைப்பது என போட்டி போட்டு மோதி வருகின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் ‘வாரிசு’ ஆடியோ வெளியீட்டு பங்ஷனில் அஜித்தை கிண்டல் செய்து விஜய் ரசிகர்கள் வைத்துள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘வாரிசு’ படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தில் ராஜு தயாரித்துள்ளார் . இதன் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது புரமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கும் இந்தப்படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களே விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிளாக ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியானது. விவேக் எழுதிய இந்தப்பாடலை விஜய் பாடியிருந்தார். அதனை தொடர்ந்து ‘வாரிசு’ படத்தின் இரண்டாவது சிங்கிளாக ‘தீ தளபதி’ பாடல் வெளியானது. தமன் இசையில் சிம்பு இந்தப்பாடலை பாடியிருந்தார். ‘ரஞ்சிதமே’ பாடலை விட இந்தப்பாடல் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது.

அண்மையில் அம்மா சென்டிமென்டில் கே.எஸ். சித்ராவின் மயக்கும் குரலில் பாடல் ஒன்று வெளியானது. இந்நிலையில் தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கில் ‘வாரிசு’ படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக ஆரம்பம் ஆகியுள்ளது. விஜய் மற்றும் படக்குழுவினர் அங்கு அதிரடியாக எண்ட்ரி கொடுத்துள்ளனர். ரசிகர்களும் ‘வாரிசு’ ஆடியோ லான்ச் நடக்கும் இடத்தில் ஆரவாரமாக கூடியுள்ளனர்.

Varisu: வெறித்தனமாக தயாராகும் ‘வாரிசு’ ஆடியோ லான்ச்: தமன் சொன்ன தாறுமாறு அப்டேட்.!

இந்நிலையில் அங்கு அஜித்தை சீண்டும் வகையில் விஜய் ரசிகர்கள் கையில் வைத்துள்ள பேனர் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ‘ஸ்டுடியோவிலிருந்து ரிலீஸ் பண்ண இதென்ன ஆமை பாட்டா. ஸ்டேடியம் போட்டு கொண்டாடுவோம்டா எங்க அண்ணன் பாட்ட’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் அஜித் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

VJ Archana: ஊர் வாயை அடைக்க முடியாது: வைரமுத்து பற்றிய சர்ச்சைகளுக்கு அர்ச்சனாவின் பதிலடி.!

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ப்ளு சட்டை மாறன், ஏம்ப்பா…அவர் எந்த ப்ரமோஷனுக்கும் போகாம உங்காளுக்கு ஈக்வலா டஃப் குடுக்கறாரே? அதை கொஞ்சம் யோசிச்சி பாருங்க. சர்ச்சையான பேனர்/போஸ்டர் அடிக்க வேணாம்னு விஜய் சொல்லியும் கேக்க மாட்டீங்களா? என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.