கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லோடி நகர மேயராக சீக்கிய வம்சாவளியை சேர்ந்த மைகிஹோதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நகரத்தின் மேயராக பதவியேற்கும் முதல் சீக்கியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.
மைகி ஹோதியின் பெற்றோர் இந்தியாவின் பஞ்சாபில் பிறந்து, பிறகு அமெரிக்காவில் குடியேறியவர்கள் என தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் இந்த நகரத்தின் மேயராக சாண்டிலர் இருந்த போது, மைகீ ஹோதி துணை மேயராக பதவி வகித்துள்ளார். தற்போது, மேயர் பதவிக்கான தேர்தலில் சாண்டிலர் போட்டியிடவில்லை. இதனையடுத்து நடந்த தேர்தலில், மைகியின் பெயரை, லிசா கிரேக் பரிந்துரை செய்தார்.
இதனையடுத்து மைகி மேயராக தேர்வானார். லிசா கிரேக், துணை மேயராக போட்டியின்றி தேர்வானார். லோடி நகரத்தின் 117 வது மேயராக தேர்வானது பெருமை அளிக்கிறது என மைகி ஹோதி கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement