சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் தீ பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக சபரிமலை ஐயப்பன் கோவில் இருக்கிறது. இந்த காலகட்டத்தில் தரிசனம் செய்ய பலரும் சென்று வருகின்றனர். தென்னிந்தியாவில் இருக்கும் பல மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அன்றாடம் சபரிமலைக்கு வந்து வழிபட்டு விட்டு செல்கின்றனர்.
சில நாட்களுக்கு முன் சபரிமலையில் வழிபாட்டிற்காக அதிகப்படியான கூட்டம் கூடியது. எனவே, வாகனங்கள் நகர முடியாத அளவிற்கு அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை சபரிமலை நிர்வாகத்தினர் கருத்தில் கொண்டு முதியவர்கள் சிறுவர்களுக்கு தனி வரிசை அமைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில், தற்போது சபரிமலைக்கு சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தபோது ஐயப்ப பக்தர்கள் பயணித்த வாகனம் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வெங்கனூர் தேசிய நெடுஞ்சாலையில் தீ பற்றி எரிந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக இந்த வேனில் பயணித்த யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. நெடுஞ்சாலையில் வேன் தீ பற்றி எரிந்த காரணத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.