காதலியின் முகத்தில் மிதித்து கொடூர தாக்குதல்! வெறிச்செயலில் ஈடுபட்ட காதலனின் வீடு இடிப்பு..அதிர்ச்சி வீடியோ


இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர், திருமணம் செய்துகொள்ள கூறிய காதலியை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலியை கொடூரமாக தாக்கிய காதலன்

மத்திய பிரதேச மாநிலம் ரிவா மாவட்டம் தாரா கிராமத்தைச் சேர்ந்தவர் பங்கஜ் திருப்பதி (24). ஓட்டுநராக பணிபுரியும் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

கடந்த புதன்கிழமை இருவரும் நடந்து செல்லும்போது, பங்கஜ்ஜின் காதலி தன்னை திருமணம் செய்யுமாறு கேட்டுள்ளார்.

இது பங்கஜ்ஜிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடனே அவர் அப்பெண்ணை கொலை வெறியுடன் தாக்கியுள்ளார்.

தரையில் தள்ளி, அவரது முகத்தில் மிதித்து பங்கஜ் தாக்கியதில் அப்பெண் நிலைகுலைந்து மயங்கினார்.

அதன் பின்னர் அப்பெண் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். படுகாயமடைந்ததால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வைரலான வீடியோ

பங்கஜ் தனது காதலியை தாக்கியதை வீடியோவாக எடுத்த நபர் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், உத்தர பிரதேசத்தில் பதுங்கி இருந்த பங்கஜ்ஜை அதிரடியாக கைது செய்தனர்.

தாக்குதல் நடத்தியவரின் வீடு இடிப்பு

மேலும் தாரா கிராமத்தில் உள்ள பங்கஜ்ஜின் வீட்டை அதிகாரிகள் இடித்து தள்ளினர். இதுதொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், தனது கடமையை செய்ய தவறியதாக மவ்கஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்வேதா மவ்ரியா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தனது ட்விட்டர் பதிவில்,

‘மத்திய பிரதேசத்தில் பெண்கள் மீது அட்டூழியத்தில் ஈடுபடும் எவரும் தப்ப மாட்டார்கள். குற்றம் சாட்டப்பட்டவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.  

காதலியின் முகத்தில் மிதித்து கொடூர தாக்குதல்! வெறிச்செயலில் ஈடுபட்ட காதலனின் வீடு இடிப்பு..அதிர்ச்சி வீடியோ | Man Brutely Attack His Lover Viral Video



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.