கொரோனா பரவலை தடுக்க ஒத்திகை நிகழ்ச்சி: மத்திய அரசு முடிவு| Rehearsal program the day after tomorrow to prevent the spread of Corona: Central Government decision

புதுடில்லி: கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதை உறுதிப்படுத்த, நாளை மறுநாள்(டிச.,27) நாடு முழுவதும் மருத்துவமனைகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா அந்நாட்டில் மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் புது வகை கொரோனாவை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. நாளை மறுநாள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடை பெரும் என மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

latest tamil news

இதில் கொரோனா சிகிச்சை ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பது குறிப்பிடப்படும், ஆக்சிஜன் வசதிகள், ஐ.சி.யூ படுக்கைகள் உள்ளிட்டவை தயார் நிலையில் இருப்பதும் உறுதிசெய்யபட உள்ளது. மருத்துவ துறை சார்ந்த அனைத்து பணியாளர்களும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.