டெல்லி: கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதை உறுதிப்படுத்த நாளை மறுநாள் நாடெங்கும் உள்ள மருத்துவமனைகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா அந்நாட்டில் மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் புது வகை கொரோனாவை தடுக்க ஒன்றிய மாநில அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் நாடெங்கும் உள்ள மருத்துவமனைகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடை பெரும் என ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் கொரோனா சிகிச்சை ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பது குறிப்பிடப்படும், ஆக்சிஜன் வசதிகள், ஐ.சி.யூ படுக்கைகள் உள்ளிட்டவை தயார் நிலையில் இருப்பதும் உறுதிசெய்யபட்டுள்ளது. மருத்துவ துறை சார்ந்த அணைத்து பணியாளர்களும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.