கோவிலுக்கு நடந்த சென்ற பெண்ணிடம் பட்டப்பகலில் செயின் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் குழந்தை அம்மாள் நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எல்ஐசி-யில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில் மனைவி சிவசங்கரி வீட்டில் இருந்து கோவிலுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் சிவசங்கரியின் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க செயினை பறித்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக சிவசங்கரி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செயினை பறித்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.