கோவை வந்த உதயநிதி ஸ்டாலின்… பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்!

மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் புதிதாக அமைச்சராக பதவியேற்றுள்ள

, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அமைச்சரானதும் முதல்முறை கோவை வருகை புரிந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்திய கொங்கு மண்டலத்தில் கோவை மாவட்டம் முக்கியமான ஒன்று.

மு.க.ஸ்டாலின் வகுத்த வியூகம்

இங்கு திமுகவின் செல்வாக்கை வலுப்படுத்தும் நோக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வியூகங்கள் வகுத்து செயல்பட்டு வருகிறார். பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிறப்பான வெற்றியை பெற்று தந்தார். அடுத்தகட்டமாக ஒவ்வொரு வார்டிலும் திமுகவின் செல்வாக்கை உயர்த்தி 2024 மக்களவை தேர்தலில் வெற்றி வாகை சூடுவதற்கு

தலைமை திட்டமிட்டுள்ளது.

உதயநிதிக்கு முக்கியத்துவம்

இதில் உதயநிதி ஸ்டாலினுக்கும் முக்கியத்துவம் அளிக்க வியூகம் வகுக்கப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இத்தகைய சூழலில் அவரது கோவை சுற்றுப்பயணம் கவனம் பெற்றுள்ளது. நேற்று இரவு விமானம் மூலம் சென்றடைந்த நிலையில், இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

கோவை சுற்றுப்பயணம்

முதலில் கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் செயற்கை இழை ஓடுபாதை அமைக்கும் பணிக்காக 6.55 கோடி ரூபாய் மற்றும் விளையாட்டு அரங்கை மேம்படுத்த சிறப்பு மராமத்து பணிகளுக்காக 65.15 லட்ச ரூபாய் ஆகியவற்றுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி வைத்தார். இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களிடம் கருத்துகளை கேட்டறிந்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

உடன் நின்ற செந்தில் பாலாஜி

இந்த நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.

திமுகவினர் பிரம்மாண்ட வரவேற்பு

அப்போது அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாடு, சிறப்பு திட்ட செயலாக்கம், வறுமை ஒழிப்பு மற்றும் ஊரக கடன் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோவையில் இருந்து புறப்பட்டார்

கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு திட்டங்கள் மற்றும் செயலாக்கம் குறித்து ஆலோசித்தனர். இதையடுத்து கொடிசியா மைதானத்தில் நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். இத்துடன் கோவையில் உதயநிதி ஸ்டாலினின் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.