வாரிசு இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் வாரிசு படத்தில் நடித்திருந்த நடிகர்கள் விஜய், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ஸ்டேடியம் முழுவதும் ரசிகர்கள் வெள்ளத்தில் மிதந்தது. விஜய் வரும்போதே ஆர்பரித்த ரசிகர்கள் அவர் பேசுவதற்கு வரும்போது விண்ணை முட்டும் அளவுக்கு கோஷம் எழுப்பி வரவேற்றனர். விஜய்யும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் செம ஜாலியாக பேசினார்.
விஜய்யின் சுவாரஸ்ய பேச்சு
அவர் பேசும்போது, ” நம்ம போகின்ற பயணம் நிறைவாக இருக்கணும் என்றால் நாம் போகின்ற பாதை சரியா இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதேபோல், எனக்கு நிறைய அன்பு கொடுத்து இருக்கிறீர்கள். உங்களுக்கு எல்லாம் முத்தம் கொடுக்க எனக்கு ஒரு ஸ்டைல் மாட்டியது. இனிமே இது தான். யோகி பாபு ஒரு காலத்தில் எப்படியாவது ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் இருந்தார். இப்போது யோகி பாபுவை ஒரு படத்திலாவது நடிக்க வைக்க வேண்டும் என பலரும் ஆசைபடுகின்றனர். அந்த வளர்ச்சி சந்தோஷம் அளிக்கிறது.
#EnNenjilKudiyirukkum pic.twitter.com/4rbooR4XLa
— Vijay (@actorvijay) December 24, 2022
வந்துவிட்டீர்கள் எஸ்.ஜே. சூர்யா, இன்னும் கொஞ்ச காலம்தான். எஸ்.ஜே. சூர்யா இந்த படத்தில் நடித்தது குறைவுதான். அவருடைய கனவு கொஞ்ச தூரத்தில் தான் உள்ளது. அன்பு தான் இந்த உலகத்தை ஜெயிக்க கூடிய ஒரே ஆயுதம். எதற்காகவும் அவற்றை விடக்கூடாது. அதில் ஒன்று உறவுகள், மற்றொன்று நம்மை விட்டு கொடுக்காத நண்பர்கள். இந்த இரண்டு உறவுகள் இருந்தாலும் போதும்.
மனிதர்களை பிரிக்கும் மதம் வேண்டாம்
ரத்த தானம் செயலை நான் தொடங்க காரணம் ரத்தத்திற்கு மட்டும் தான் வேறுபாடு கிடையாது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி கிடையாது, மதம் கிடையாது. மனிதர்கள் தான் பிரித்து பார்த்து பழகி விட்டோம். ரத்தத்திற்கு அந்த பேதம் கிடையாது. 6000 பேருக்கு மேல் அந்த செயலியில் இணைந்து உள்ளனர். பலர் ரத்த தானம் செய்து உள்ளனர். இது எல்லாம் மன்ற நிர்வாகிகளுக்குதான் சேரும். பிடித்து இருந்தால் எடுத்து கொள்ளுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள்”.
— Ahimsa Entertainment (@ahimsafilms) December 24, 2022
குஷ்பூவின் சின்னத்தம்பி படம்
குஷ்பூ அவர்களை பார்க்கும்போதெல்லாம் நான் சின்னதம்பி படம் பார்க்க சென்றது தான் ஞாபகம் வருகிறது. கமலா தியேட்டரில் எனது தோழியுடன் சென்று அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி படம் பார்த்தேன்” என ஓபனாக பேசினார். தொகுப்பாளர் ரம்யா யார் அது என கேட்க கொஞ்சம் வெளிய இருமா என கூலாக பதில் அளித்தார். விஜய்யின் இந்த அணுகுமுறை ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
— Laxmi Kanth (@iammoviebuff007) December 24, 2022