தமிழ்நாட்டில் உதயசூரியன் மறைந்து விரைவில் தாமரை மலரும்… பாஜக கேபிஆர் நம்பிக்கை!

பாஜகபின் மூத்த தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் திருச்செங்கோட்டில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் கேபி ராமலிங்கம் பங்கேற்ற கேபிஆர் இவ்வாறு கூறினார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இன்று வாஜ்பாய் பிறந்த தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் நல்லாட்சி தின விழா கொண்டாடப்பட்டது. திருச்செங்கோடு நகரப் பகுதியான ஆறுமுகசாமி கோவில் மற்றும் திருச்செங்கோடு வடக்கு ஒன்றிய பகுதியான சின்னத்தம்பி பாளையம் பேருந்து நிலையம் பகுதிகளில் இன்று மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியை பாஜக மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் துவக்கி வைத்தார். இதில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர் “நல்லாட்சி தின விழா கொண்டாடக்கூடிய தகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே உள்ளது. தமிழகத்தில் குடும்ப அரசியல் ஆட்சி ஒழிந்து பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை, இலவச மருத்துவ முகாமில் மக்கள் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட பொது செயலாளர் தினேஷ்குமார்,மாவட்ட துணை தலைவர் பி. ரமேஷ் ,மாவட்ட செயலாளர் பூங்குழலி , நகர தலைவர் APL நாகராஜன் ,ஒன்றிய தலைவர் அப்புசாமி மற்றும் நகர மண்டல மாநில பொறுப்பாளர்கள் இணைந்து வாஜ்பாய் பிறந்த நாளை ஒட்டி மருத்துவ முகாமை நடத்தினர்.

இந்த மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். முன்னதாக வாஜ்பாயின் திருவுருவ படத்திற்கு பாஜக தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பல ஆண்டுகளாக திமுகவில் இருந்து வந்த கேபி ராமலிங்கம், அக்கட்சியின் சார்பில் மாநிலங்களவை எம்பியாகவும் பதவி வகித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த அவர், தற்போது அந்த கட்சியின் மாநில துணைத் தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.