குவஹாத்தி: அசாமில், தாயை கொலை செய்து 10 மாத கைக்குழந்தையை கடத்திய தம்பதி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அசாமின், சாரைடியோ மாவட்டத்தில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் பெண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர், கெண்டுகுரி பைலங்க் கிராமத்தைச் சேர்ந்த நிதுமோனி என்பது தெரியவந்தது. இதற்கிடையே இவரது 1-0 மாத கைக்குழந்தையை, ஜோர்ஹட் பஸ் நிலையத்தில் போலீசார் மீட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
அசாமின் தெங்கபுகாரியைச் சேர்ந்த பசந்தா கோகாய், தன் தாய், மனைவி, மகனுடன் வசித்து வருகிறார். திருமணமாகி ஹிமாச்சலில் வசித்து வரும் தன் மகளுக்கு குழந்தை இல்லாததால், நிதுமோனியின் குழந்தையை தர, இவர் முடிவு செய்தார். இதற்காக நிதுமோனியை தங்கள் வீட்டிற்கு வரவழைத்து குழந்தையை கேட்டுள்ளார். இதற்கு, நிதுமோனி மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த பசந்தா குடும்பத்தினர் பலமான ஆயுதத்தால் அவரை தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
உடலை தேயிலை தோட்டத்தில் வீசிய அவர்கள், கைக்குழந்தையை, ஹிமாச்சலில் உள்ள தன் மகளுக்கு கொடுத்தனுப்ப முயற்சித்துள்ளனர். இந்நிலையில், குழந்தையை பத்திரமாக மீட்ட போலீசார், அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement