தற்போது பெய்து வரும் மழையினால் பல பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வழிந்தோடும் நிலையை எட்டியிருப்பதாக எமது ஊடக பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யான் ஓயா மற்றும் ராஜாங்கனை நீர்த்தேக்கங்களின் 02 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் டி.அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்.
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் தலா 03 அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் டி.அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்.
தெதுறு ஓயாவின் கீழ் பிரிவில் சிறிய அளவான வெள்ள நிலை ஏற்படலாம் என்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்ததுடன், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளார்.