சீரற்ற காலநிலையினால் அக்குறணை, துணுவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மண்மேடு சரிந்து விழுந்ததினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரரிகள் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் 18, 19 வயதுடையவர்களாவர். அனர்த்தம் நிகழ்ந்த போது வீட்டில் 5 பேர் தங்கியிருந்தனர். உயிரிழந்த இருவரின் மற்றுமொரு சகோதரி பலத்த காயமடைந்துள்ளார்.இந்த அனர்த்தம் இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, மண்மேடு சரிந்து விழ்ந்ததினால் மாவனெல்லையில் இருந்து ஹெம்மாதகம ஊடாக கம்பளைக்கு செல்லும் பிரதான வீதியில் மூன்றாவது மைல்கல் பகுதி வீதி மூடப்பட்டுள்ளது.
அனர்த்த நிலையை கவனத்திற்கொண்டு பொலிஸார் பல வாகனங்களை வழிமறித்து மாற்று வீதி ஊடாக அனுப்பிவைத்துள்ளனர்.