நடிகை தற்கொலை..லவ் ஜிகாத் காரணம்..பாஜக எம்எல்ஏ உறுதி.!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள வசாய் என்ற இடத்தில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் துனிஷா சர்மா என்ற நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ‘அலி பாபா: தஸ்தான்-இ-காபூல்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவரது சக நடிகரான ஷீசன் முகமது கான், துனிஷாவின் தாயின் புகாரின் அடிப்படையில் தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இருவரும் காதலித்து வந்ததாகவும், 15 நாட்களுக்கு முன்பு பிரிந்ததாகவும், இது துனிஷாவை தற்கொலைக்குத் தள்ளியிருக்கலாம் என்று இந்த வழக்கின் எஃப்ஐஆர் கூறுகிறது.

இந்தநிலையில் மகாராஷ்டிராவின் பாஜக எம்எல்ஏ ராம் கதம், நடிகை தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் “லவ் ஜிஹாத்” சந்தேகம் இருப்பதாக அச்சம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு, அனைத்து கோணங்களிலும் ஆராயப்படும், குற்றவாளிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும், துனிஷா ஷர்மாவின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் என்றும் ராம் கதம் கூறினார்.

“தற்கொலைக்கு காரணம் என்ன? இதில் லவ் ஜிகாத் உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா? விசாரணையில் உண்மை தெரியவரும், ஆனால் துனிஷா ஷர்மாவின் குடும்பத்திற்கு 100 சதவீதம் நீதி கிடைக்கும். மேலும் இது லவ் ஜிகாத் என்றால், அதன் பின்னணியில் உள்ள அமைப்புகள் மற்றும் சதிகாரர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்துவார்கள்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

ஷீசன் முகமது கானை 4 நாள் போலீஸ் காவலில் வைக்க மும்பை வசாய் நீதிமன்றம் இன்று மதியம் அனுமதித்தது. நீதிமன்றத்தில், முகமது கானின் வழக்கறிஞர் ஷரத் ராய், செய்தியாளர்களிடம் பேசுகையில், “என்ன நடந்தாலும் காவல்துறையும் நீதிமன்றமும் செயல்படுகின்றன. அவர் (ஷீசன் கான்) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை” என்றார்.

மற்றொரு சக நடிகரான பார்த் ஜூட்ஷி, சம்பவம் குறித்து விசாரணைக்காக ஞாயிற்றுக்கிழமை காவல்துறையினரால் அழைக்கப்பட்டார். காவல் நிலையத்திற்கு வெளியே ஊடகங்களிடம் பேசிய ஜூட்ஷி, சம்பவத்தின் போது படப்பிடிப்பு தளத்தில் அவர் இல்லை என்று கூறுனார். “என்னை போலீசார் விசாரணைக்கு அழைத்தனர், மேலும் பொதுவான கேள்விகள் கேட்கப்பட்டன. நான் அவர் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது. எனக்கு எதுவும் தெரியாது, அது நடிகையின் தனிப்பட்ட விஷயம்.”

20 வயதான நடிகர், படப்பிடிப்பின் போது தேநீர் இடைவேளைக்குப் பிறகு கழிவறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்; நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் கதவை உடைத்து திறக்க நேரிட்டதாக வாலிவ் போலீசார் தெரிவித்தனர். நள்ளிரவு 1:30 மணியளவில் படப்பிடிப்பு குழுவினர் நடிகையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

டிஷர்ட் பற்றி கேட்கிறார்கள்..விவசாயிகள் பற்றி கேட்பதில்லை; ராகுல் காந்தி வருத்தம்.!

துனிஷா ஷர்மா தற்கொலை செய்து கொண்டதாக அவரது சகாக்கள் கூறினர், ஆனால் போலீசார் சம்பவ இடத்திலேயே விசாரணை நடத்தி தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். அவரது மரணம் குறித்து கொலை மற்றும் தற்கொலை ஆகிய இரு கோணங்களிலும் விசாரணை நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.