நாடு முழுதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தேவாலயங்களில் பிரார்த்தனை | Christmas celebration across the country: Prayers in churches

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நாடு முழுதும் மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.

கிறிஸ்துமஸ் விழா இன்று(25ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

டில்லி:

தலைநகர் டில்லியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டியது. நள்ளிரவில் தேவாலயங்களில் திருப்பலி நடந்தது. இதில் ஏரளாளமான கிறிஸ்தவர்கள் குவிந்தனர்.

சென்னை:

சென்னையில் பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னை முழுவதும் சுமார் 8000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோல்கட்டா:

மேற்குவங்கத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, கோல்கட்டாவில் பிரசித்தி பெற்ற தேவாலயம் ஒன்றில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் முதல்வர் மம்தா பங்கேற்றார். பேக்கரிஷாப்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கேக்குகள், இனிப்புகளை வாங்க நீண்ட வரிசையில் நின்றனர்.

latest tamil news

latest tamil news

இதே போன்று பல்வேறு மாநிலங்களில் உள்ள பிரசித்தி பெற்ற தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன.

தவிர வெளிநாடுகளிலும் கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.