பழனி மலைக்கோவிலில் யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி: அமைச்சர்கள் பங்கேற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் வருகின்ற ஜனவரி மாதம் 27-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதாவது 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடைபெறும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் உணவு மாற்றும் உணவு வழங்கும் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் இந்து சமய நலத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டனர்.

மலை கோயில் மேல் பிரகாரத்தில் உள்ள பாரவேல் மண்டபம் கார்த்திகை மண்டபம் பகுதிகளில் யாகசாலை அமைப்பதற்கு முகூர்த்த கால் மூன்றுபனி இன்று நடைபெற்றது, இதில் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பழனி மலை கோவிலில் பிரகாரங்களில் உள்ள சில்வர் தடுப்புகள் மற்றும் மடக்கு கதவுகள், தங்க விமானத்தை சுற்றி உள்ள பாதுகாப்பு வேலிகளை அகற்றி விட்டு 1 கோடி 12 லட்சம் மதிப்பில் பித்தளையில் ஆனா தடுப்பு கம்பிகள் மரகதவுகள், பாதுகாப்பு வேலிகள், அமைக்கும் பணியை தொடங்கி வைத்துள்ளனர்.

முன்னதாக பழனி கோவிலுக்கு சொந்தமான சித்த மருத்துவமனையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சி தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.