
பவன் கல்யாண் படத்தின் மூலம் தெலுங்கில் நுழைந்த பாபி தியோல்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யாண் தற்போது ஹரிஹர வீர மல்லு என்கிற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்காக பாலிவுட் நடிகர் பாபி தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை இயக்குனர் கிரிஷ் வெளியிட்டுள்ளார்.
வரலாற்றுப் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் மொகலாயப் பேரரசர் அவுரங்கசீப் கதாபாத்திரத்தில் தான் பாபி தியோல் நடிக்க உள்ளார். முதன்முறையாக தென்னிந்திய திரையுலகில் நடிக்க இருப்பது குறித்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ள பாபி தியோல், இப்படி ஒரு வரலாற்று படத்தில் எனக்கு நடிக்க முதல் வாய்ப்பு கிடைத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.