புதிய அரசியல் செயலாளராக பழைய நண்பரை நியமித்த ரிஷி சுனக்!


பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தனது புதிய அரசியல் செயலாளராக பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோர்சித்தை நியமித்துள்ளதாக டவுனிங் ஸ்ட்ரீட் உறுதிப்படுத்தியுள்ளது.

பத்திரிகை ஆசிரியர்

கன்சர்வேட்டிவ் பத்திரிகையான தி ஸ்பெக்டரின் ஆசிரியராக பணியாற்றும், ஃபோர்சித், தி டைம்ஸ் பத்திரிகையின் கட்டுரையாளராகவும் இருக்கிறார்.

பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஃபோர்சித் இருவரும் Winchester-யில் ஒன்றாக பயின்றவர்கள். ரிஷி சுனக்கின் நண்பராக ஃபோர்சித் இருந்துள்ளார்.

ஃபோர்சித்தின் திருமணத்தின்போது ரிஷி சுனக் Bestman ஆக இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

James Forsyth/ஜேம்ஸ் ஃபோர்சித்

ஜேம்ஸ் ஃபோர்சித்தின் பொறுப்புகள்

இந்த நிலையில் புதிய அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஃபோர்சித், பிரதமருக்கு ஆலோசனைக்கு வழங்குவார், அத்துடன் பிரதமர், கொள்கைப் பிரிவு மற்றும் டோரி கட்சிக்கு இடையே இணைப்பாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

James Forsyth/ஜேம்ஸ் ஃபோர்சித்

@The Spectator

இந்த நியமனம் வரி செலுத்துவோருக்கு எந்த செலவும் இல்லாத அரசியல் ரீதியானது என்று கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் உருவாக்கிய பொருளாதாரக் குழப்பத்தை ரிஷி சுனக் சரி செய்வதற்கான முயற்சிகள் மற்றும் தொழில்முறை நடவடிக்கைகளால் வரையறுக்கப்பட்டுள்ளன. 

Rishi Sunak/ரிஷி சுனக்

@PA



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.