மீண்டும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ள கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் காற்றின் தரம்


கொழும்பு மற்றும் பல பகுதிகளில் காற்றின் தரம் மீண்டும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.

இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் காற்று மாசுபாடு சற்று அதிகரிக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு எச்சரித்துள்ளது.

வளிமண்டலத்தில் தூசி துகள்கள் அதிகரிப்பதால் காற்றின் தரம் பாதுகாப்பற்ற நிலைக்கு செல்லும்.

இதனால் வரும் நாட்களில் நாட்டில் மூடுபனி போன்ற நிலை தோன்றும்.

இலங்கையில் காற்று மாசு

இலங்கையின் காற்று மாசுபாட்டிற்கான முக்கிய காரணங்களில் ஒன்று இந்தியாவில் இருந்து வீசும் பலத்த காற்றினால் தூசித் துகள்களின் வருகையாகும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

மீண்டும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ள கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் காற்றின் தரம் | Air Pollution High In Sri Lanka

இந்தநிலை, வானிலை நிலையைப் பொறுத்து அவ்வப்போது மாறலாம், ஆனால் அடுத்த சில நாட்களில் காற்று மாசுபாடு சிறிது அதிகரிக்கலாம் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

நேற்று, கொழும்பின் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற 166ஆக இருந்தது, அமெரிக்க காற்று தரக் குறியீடு படி. நீர்கொழும்பு 173, கம்பஹா 165, தம்புள்ளை 137, கண்டி 91, அம்பலாந்தோட்டை 82 மற்றும் நுவரெலியா 41ஆக இருந்தது.

ஆரோக்கியமற்ற காற்றின் தரம்

தரவுகளின்படி 150 முதல் 200 வரை காற்றின் தரத்தை கொண்ட பகுதிகள் ஆரோக்கியமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் காற்றின் தரம் மோசமடைந்தால், பல்வேறு முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.

மிகவும் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் மற்றும் வயதான நபர்கள் சிறப்புப் பாதுகாப்பைப் பெற வேண்டும்.

மீண்டும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ள கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் காற்றின் தரம் | Air Pollution High In Sri Lanka

சுவாசம், நுரையீரல் அல்லது இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அல்லது சிவப்பு வரம்பில் (151 – 200) இருந்தால், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், வெளிப்புற வேலை அல்லது செயல்பாடுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதேநேரம் ஆரோக்கியமாக இருக்கும் அனைவரும் வெளியில் செலவிடும் நேரத்தை குறைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.