மீண்டும் லாக்டவுண் – இந்தியாவின் நிலைமை எப்படி இருக்கு ?

சீன நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளிலும் உருமாறிய தொற்று பரவல் காணப்படுகிறது. சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய ஒமிக்ரான் BF7 கரோனா தொற்று இந்தியாவிலும் தென்பட்டதை அடுத்து, மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளது. 

விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளை கண்காணித்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்துள்ளன. தொடர்ந்து, மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இருப்பு போதிய அளவில் உள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்ளும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில், சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், இந்தியா தனது கண்காணிப்பையும், விழிப்புணர்வையும் பலமாக்க வேண்டும் என முன்னாள் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர், மருத்துவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் உள்ளவர்களுக்கு ‘ஹைப்ரிட் நோய் எதிர்ப்பு சக்தி’ அதாவது, தடுப்பூசி மூலம் வலுவூட்டப்பட்ட தொற்று காரணமாக இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருப்பதால், கடுமையான கொரோனா வைரஸ் வழக்குகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு தீவிரமாகவில்லை என்றும் அவர் கூறினார். இந்தியாவின் தற்போதைய கொரோனா சூழ்நிலை வைத்து பார்க்கும்போது, சர்வதேச விமானங்களை கட்டுப்படுத்தவோ அல்லது ஊரடங்கை விதிக்கவோ உண்டான தேவையை அளிக்கவில்லை என்றார். 

தொற்று பரவுவதைத் தடுப்பதில் விமானங்களைத் தடை செய்வது மட்டும் பயனுள்ளதாக இல்லை என்பதை கடந்த கால அனுபவங்கள் காட்டுகின்றன என்றார். மேலும், சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் ஒமைக்ரன் BF.7, ஏற்கனவே நம் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

வரவிருக்கும் நாட்களில் லாக்டவுன் தேவையா என்று கேட்டதற்கு, டாக்டர் குலேரியா, “ஒரு நல்ல தடுப்பூசி பாதுகாப்பு மற்றும் இயற்கை தொற்று காரணமாக இந்திய மக்கள் ஏற்கனவே கலப்பின நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பதால், கொரோனா அதிகரிக்க வாய்ப்பில்லை. 

தொடர்ந்து, கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு தீவிரமானதோ இல்லை. தற்போதைய சூழ்நிலை மற்றும் மக்கள்தொகையில் நல்ல அளவிலான கலப்பின நோய் எதிர்ப்பு சக்தியைக் கருத்தில் கொண்டு, ஊரடங்கு தேவையே இல்லை” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.