முதல் கிறிஸ்துமஸ் உரையாற்றிய மன்னர் சார்லஸ்! தாய் மகாராணிக்கு அஞ்சலி


பிரித்தானிய மன்னர் சார்லஸ் தனது முதல் கிறிஸ்துமஸ் உரையில் மறைந்த மகாராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

மன்னர் சார்லஸின் முதல் கிறிஸ்துமஸ் உரை

கிறிஸ்துமஸ் தினத்தன்று சாண்ட்ரிங்ஹாம் தேவாலயத்தில் மன்னர் சார்லஸ் தனது உரையை ஆற்றினார். 1951ஆம் ஆண்டில் மன்னர் ஆறாம் ஜார்ஜுக்கு பின்னர் கிறிஸ்துமஸில் உரை நிகழ்த்திய முதல் மன்னர் சார்லஸ் ஆவார்.

பல பிரித்தானியர்கள் தங்கள் மன்னரின் குரலைக் கேட்பது இதுவே முதல் முறையாகும். சுமார் 10 மில்லியன் மக்கள் கேட்கும் வகையில் ஒலிபெருக்கிகள் பொதுவில் வைக்கப்பட்டது.

Charles/சார்லஸ்

@Andrew Milligan/WPA Pool/REX/Shutterstock

மன்னர் தனது உரையின் போது, தற்போதைய வாழ்க்கைச் செலவு நெருக்கடியின்போது போராடும் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவிக்க நேரத்தை எடுத்துக் கொண்டார்.

மேலும், தேவைப்படுபவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மதக் குழுக்களைப் பாராட்டினார்.

பொருளாதார நெருக்கடியின்போது உடல்நலம் குன்றியவர்களுக்காக உணவு அல்லது நேரத்தை தானம் செய்யும் அற்புதமான அன்பான மக்களுக்கு நன்றி சார்லஸ் தெரிவித்தார்.

மேலும், ‘நன்மை மற்றும் இரக்கத்துடன்’ மற்றவர்களின் வாழ்க்கையைத் தொடக்கூடிய மறைந்த ராணியின் ‘மக்கள் மீதான நம்பிக்கை’யைப் பகிர்ந்து கொண்டதாக அவர் கூறினார்.

அத்துடன் இது நமது சமூகத்தின் சாராம்சம் மற்றும் நமது சமூகத்தின் அடித்தளம் என்று விவரித்தார்.

மகாராணிக்கு அஞ்சலி

மறைந்து ராணியும், தனது தாயுமான எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்திய மன்னர், தனது குடும்பத்திற்கு காட்டப்பட்ட அன்பு மற்றும் அனுதாபத்திற்காக நலம் விரும்பிகளுக்கு நன்றி கூறினார்.

Charles/சார்லஸ்

தொடர்ந்து பேசிய மன்னர் சார்லஸ், ‘மிகுந்த கவலை மற்றும் கடினமான இந்த நேரத்தில் உலகெங்கிலும் உள்ள மோதல்கள், பஞ்சம் அல்லது இயற்கை பேரழிவுகளை எதிர்கொள்பவர்களுக்காகவோ அல்லது வீட்டில் இருப்பவர்கள் தங்கள் கட்டணங்களைச் செலுத்துவதற்கும், தங்கள் குடும்பங்களை உணவூட்டுவதற்கும், அரவணைப்பதற்கும் வழியைக் கண்டுபிடிப்பதையும் நாம் பார்க்கிறோம்.

நமது தேசம் மற்றும் குடியரசில் உள்ள மக்களின் மனித நேயம் மற்றவர்களின் அவலத்திற்கு உடனடியாக பதிலளிக்கும்’ என தெரிவித்தார்.

Charles/சார்லஸ்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.